Monday, 31 December 2012

இன்னலற்ற வாழ்க்கை வாழ - சாலை பாதுகாப்பு

தேசிய சாலை பாதுகாப்பு வாரம்ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை!


       இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி1  முதல்7  ஆம் தேதி வரை  தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம்(  National Road Safety Week, January 1 to 7) கடைபிடிக்கப்படுகிறது.
         நம் மக்களிடையே, விபத்துக்களைக் குறைப்பது,  விபத்து ஏற்படாமல் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
         சாலை விபத்துக்களால் பலர், வருமானம் ஈட்டும் குடும்பத்தின் உறுப்பினரை, தாய்தந்தையரை, வாழ்க்கைத்துணையை இழக்கின்றார்கள். பலர் பிள்ளைகளை இழந்துவிடுகின்றார்கள். இதனால், குடும்பத்தினர் நிம்மதி இழந்துவாழ நேரிடுகின்றது. மேலும், இவ்விபத்துகள் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கிவே செய்கின்றன.
         இத்தகைய சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்கவும், மக்களின் சாலைப் பயணங்கள் இனிமையாக அமையவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
         இவை மட்டும் போதாது, மக்களாகிய நமது பங்களிப்பும் தேவையான ஒன்றாகின்றது. .
         சாலையில் வேகம் காட்டுவது விவேகம் அல்ல. மேலும், சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு, கவனத்தை வேறு இடத்தில் வைத்துக் கொண்டு, விதிகளுக்கு முரணாக  வாகனத்தை ஓட்டுவது  நமக்கும் நமது  குடும்பத்தினருக்கும் பல்வகை இழைப்பையே தரும்.
         சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் பலியாகின்றார்கள். இதில் சுமார் 11 முதல் 12 சதவிகித மரணம் தமிழகத்தில் நடக்கின்றது .   இதில், சென்னையில் மட்டும் சுமார் 500 பேர்  உயிரிழக்கின்றார்கள்.
          சாலை விபத்துகளில் அதிகமாக இளைஞர்கள்தான் பலியாகி வருகிறார்கள் என்ற தகவல் மிகுந்த வேதனையளிக்கும் ஒன்றாகும்.
          இதற்கு முக்கிய காரணம், விளேயாட்டுத்தனமும், பாதுகாப்பற்ற மற்றும் தலைக் கவசம் அணியாத இருசக்கர வாகனப் பயணமுமே.
                              இந்திய அளவில், எண்ணிக்கையில்.  சாலைவிபத்தில் இளைஞர்கள் பலியாவது தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது என்பது மேலும் வேதனையளிக்கும் ஒன்றாகும்.
          இளைய சமுதாயம்  பாதுகாப்போடு இன்னலற்ற வாழ்க்கை வாழ அவர்களோடு அனைவரும் புத்தாண்டில் உறுதிமொழி ஏற்போம்!

(மேலேயுள்ள படம் எவரையும் புண்படுத்தும் நோக்கமில்லாது எடுத்துக்காட்டாக என்னால் பயன்படுத்தப்பட்டுள்ளது)

3 comments:

  1. நண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் . நேரம் இருந்தால் வந்து பாருங்கள் நன்றி

    http://blogintamil.blogspot.com/2013/01/2517.html

    ReplyDelete
  2. தேவையான விவரங்களைத் தந்து விபத்துக்களை குறைப்பதன் அவசியத்தை நன்கு விளக்கியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. மிக்க நன்றி திரு. ரியாஸ் அகமது, திரு.அவைநாயகன்

    ReplyDelete