வாக்களிப்பது கடமை
தேர்தல் காலங்களில் வாக்குகளைச் சேகரிக்கும் விதமாக, வாக்குகளைக் குறிவைத்து, தனிப்பட்ட அரசியல் கட்சிகள், அல்லது அரசியல் கட்சிசார்ந்த நண்பர்கள் தருவன எதையும் நான் என்றுமே ஏற்பதில்லை. வாங்கிக்கொள்ளும்படி என்னை எவரும் கட்டாயப்படுத்தினால் ‘தேர்தலில் வாக்களிக்காது போவேன்’ என்றே அச்சுறுத்துவேன்.
வாக்களிப்பது என்பது மக்களாட்சியில், இந்தியக் குடிமகனாகிய எனது அடிப்படைக் கடமை. என் கடமையை விலைபேசுவது என்னையே விற்கமுற்படுவதாகும் என்றே நான் கருதுகின்றேன், சுயமரியாதை இழந்தபின் வாழ்வேது!
குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைக்கான, அரிதாய் கிடைக்கும், உணவுப்பொருள்களைத் தவிர்த்த அரசு தரும் பிற இலவசங்களை நான் பெறுவதில்லை, புயல், மழை, வெள்ளம்,வறட்சி போன்ற காலங்களின் அரசு நிவாரணங்கள் (ரொக்கத்தொகை) உட்பட. அவற்றை எதிர்கொள்ளும் சக்தியும் வசதியும் எனக்கிருக்கின்றது என்பதால், இல்லாதோருக்குக் கொடுங்கள் என்று!
இயல்பான நிலையில், இலவசங்கள் அற்றுப்போக, மக்களிடம் சுயமரியாதை உணர்வு தோன்ற வேண்டும்.
சுய மரியாதையைப் பேணும்போது மக்கள் நினைப்பது என்றும்
கைகூடும்!
~~~~~~~~~****~~~~~~~~~~
மிகச் சிறந்த முறையில் வாக்களிப்பது பற்றி சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவு அறிமுகம் ஆகியிருக்கிறது. வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.in/2013/01/2517.html
தங்களின் பராட்டிற்கு நன்றி.திருமதி.Ranjani Narayanan.
Deleteஎனது பதிவினை அறிமுகம் செய்ததை தங்களால் அறிந்தேன்..மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்!
Deleteநன்றி.