1.வெகுளி தரும் வெகுமதி
~~~~~~~~~********~~~~~~~~~~
~~~~~~~~~********~~~~~~~~~~
இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என எல்லாக் காலங்களிலும்
வெகுளித்தனம் வேதனையையே அளிக்கின்றது!
நகைச்சுவை உணர்வுடன் பதிவுகள் இடும் நண்பர் ஒருவருக்கு திடீரென்று ஒரு இடர்பாடு ஏற்படவே, அதையும் வெகுளியாய் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் அவர்.
விளைவு… அவரது வேதனை இன்னும் அதிகமாயிற்று.
நகைச்சுவை உணர்வுடன் பதிவுகள் இடும் நண்பர் ஒருவருக்கு திடீரென்று ஒரு இடர்பாடு ஏற்படவே, அதையும் வெகுளியாய் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் அவர்.
விளைவு… அவரது வேதனை இன்னும் அதிகமாயிற்று.
இடம்,
பொருள், ஏவல் என்பனவற்றை சற்றும்
கருத்தில் கொள்ளாத அவரது நண்பர்கள்
பலர், அந்நண்பருக்கு வந்த இடரிலிருந்து நல்லபடியாய்
வெளிவரும் ஆலோசனைகளைக் கூற முன்வராது…....கேலியானக்
கருத்துக்களைக்கூறி, கேலிச்சொற்களால் குத்திக்கீறி, ரணப்படுத்தியதைப் பார்க்கையில் மனம் வேதனையடைந்தது!
நண்பர், சிரிக்கச் சிரிக்க செய்திகள் போடுபவர். அச்சிரிப்பு வெடிகளை ரசித்தே பழக்கமாகிவிட்டதால் ஏற்பட்ட வினை!
நகைச்சுவையாய் பதிவிடுபவர்களுக்கும் துன்பங்கள் வரும் என்பதை உணர மறுக்கும் சிலர்..இருபாலர் நட்பில் கிண்டலும் கேளியுமாய் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடைய பலர்.. என்று இக்காலச்சூழல் இருப்பது "இடுக்கண் களைவது" நட்பின் பண்பு என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னமும் பலர் பெறவேயில்லை என்பதையே காட்டுகின்றது. இதைப் பார்க்கும்போதுதான் மனம் இன்னும் அதிக வேதனையடைகின்றது!
"பக்கத்திருப்பவர் துன்பம்தனைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி " என்றான் பாரதி அன்று!
இன்றோ..அத்துன்பத்தை உன்னிப்பாய்ப் பார்த்து, ஆராய்ந்து... பின் படமும் எடுத்துப்போட்டு சிலாகிக்கும் பண்புதான் மண்டிக்கிடகின்றது..
மரபுகளையும் மாண்புகளையும் இழக்கத் துணிகின்றதோ மானுடம்?
No comments:
Post a Comment