எதை நோகுவது
!
காதலை
எண்ணி நோகுவதா? காலத்தை எண்ணி நோகுவதா?~~~~~~~~~~~~~~
வீட்டுக்குப்போனதும் பாய்யோட கேசுக்கு ஆட்சேபனை எழுதனும்.. ‘என்னது இது புதுவிதமாயிருக்கு…சுடிதார் போட்டுகிட்டு புத்தம்புது மஞ்சள் தாலிய தொங்கவிட்டுகிட்டு…’ ஒரு பைய்யனின் கையைத் தன் இருகைகளாலும் பற்றி நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தபோது விளங்காத காட்சியாய் தோன்றியது. என்னத்தையோ ஜெயிச்சுட்டதுபோன்ற தோரணையில் அந்த பைய்யன்!
வராண்டாவில் வேகமாய் நடந்த நான் நடையைத் தளர்த்தி அங்கே நின்றிருந்த பி.சியை ‘என்ன கேஸ்’ என்று ஜாடையில் கேட்க அருகே வந்தவர் ‘கேர்ள் மிசிங் கேஸ் சார், விசரணையில பொண்ணு அந்த பைய்யனோட போய் கல்யாணம் பண்ணிகிட்டுதுன்னு தெரிஞ்சுது, அதான் ஐய்யாகிட்ட ப்ரொடுயூஸ் பண்றோம். நம்ம ‘………….’ வக்கீல்தான் பைய்யனுக்கு ஆஜராகிறார், அதோ அவங்கதான் அப்பா அம்மா’.
அவர் காட்டிய இடத்தில், கலைந்த தலையோடு, தூக்கமில்லாத கவலையான முகத்தோடு ஒரு அப்பா அம்மா. அவர்களை நோக்கி இவர் கைகாட்டிப் பேசவும் அந்த அப்பா ஓடிவந்தார். ‘ அய்யா, அவனோல்லாம் கூடிதான் இப்படி பண்ணிபுட்டாங்கயா..ஒண்ணும் தெரியாத புள்ளைங்க எம்புள்ள’ கேட்காமலேயே சொன்ன, எந்நேரத்திலும் சிந்தக் காத்திருக்கும் கண்ணீர் நிறைந்த அவரின் கண்களைப் பார்க்க மனமில்லாமல் அந்தப் பைய்யனருகில் இருந்தவர்களைப் பார்த்தேன். அவனின் வயதொத்தவர்கள்தான், எதையோ சாதித்துவிட்ட கும்மாளமாய்.
‘நகைகூட போனாபோவதுங்க புள்ள திரும்பி வந்தா போதும்ங்க. நல்லா படிக்கிற புள்ளங்க.. அடுத்த புள்ள இன்ஜினீர் படிக்குதுங்க..’ என்றவரிடம் ‘ஆணா, பெண்ணா? ’ ன்னு கேட்க நினைத்து மேலும் கவலைப்படுத்த விரும்பாது கேட்காமல் விட்டேன்.
‘ஏங்கய்யா… ஜட்ஜய்யா எங்ககூடத்தானேய்யா புள்ளய அனுப்புவாறு?’ என்றவரிடம் போலியான தைரியத்துடன் ‘ஆமாம், ஆமாம், அவர் கோர்ட்லேர்ந்து இறங்கியதும் ரூமில வச்சு விசாரிச்சுட்டு உங்கக்கூடத்தான் அனுப்பிவிடுவாரு’ என்றதும் கையெடுத்துக் கும்பிட்டார் அந்த அப்பாவி மனிதர்.
மேஜரான பெண். அவள் விருப்பப்படிதான் அனுப்புவாங்க பெண்ணை விசாரிக்க எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகும். அதுவரை இவர் கவலையில்லாது இருக்கட்டுமேயென்று எனக்குத் தோன்றியது.
யாரென்றே
அறியாத எனக்கு அவரை சிறிது நேரமாவது கவலைப்படாமல்
வைத்த திருப்தி. ஆ..…மா….ம்… இதுமாதிரி ஏன் அந்த மகளுக்கு தோணாமல் போச்சு ?.
காதலை எண்ணி நோகுவதா? காலத்தை எண்ணி நோகுவதா?
&&~~~~~~~~~~~~~~~~~~~~~~&&
இதே புள்ளை இரண்டு வருடம், இரண்டு வருடம் எதுக்கு, ஒரே வருடத்தில, நடு ரோட்டில நிக்கப்போவுது பாருங்க, அப்ப தெரியும் காதலும் கத்தரிக்காயும்?
ReplyDeleteஅய்யா அப்படி சொல்லாதீ்ர்கள், காதலிப்பவர்கள் அனைவரும் தவறானவர்கள் இல்லை. காதல் இல்லாமல் உலக இயக்கமில்லை. முகம் அறியா அந்த பருவச்சிட்டுக்களை சபிப்பதை நிறுத்திவிட்டு ஏன் அப்படி நடந்தது என்று சிந்தனை செய்யுங்கள். அந்த அந்த பருவத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் நம் சந்ததியினருக்கு தரப்படவில்லை. தனக்கு ஒரு பெண்ணையோ அல்லது பையனையோ பிடித்திருப்பதை வெளிப்படையாக பேசும் அளவிற்கு கூட நாம் அவர்களை அனுமதிப்பதில்லை. சபிப்பது என்பது நம் சமுதாயத்தை இன்னமும் பின்னுக்கு தள்ளுமே தவிர... நன்மை செய்யாது.
Delete