Tuesday 13 May 2014

எல்லோரும் இந்நாட்டு மன்னர்தான், ஆனால்...


                எல்லோரும் இந்நாட்டு மன்னர்தான், ஆனால்...
                                 ~~~~~~~~~~~~~~~~
     புதுச்சேரியின் முன்னாள் அமைச்சரும் தற்போதய சட்டமன்ற உறுப்பினருமான நண்பரின் அலுவலகத்தில் இருந்தபோது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

  அழைத்தவர், நண்பரின் தொகுதியில் வசிக்கும் ஒரு பெண்மணி. அப்பெண்மணிக்கு பதில் அளிக்கையில்..

‘‘ ஆமாம்மா...காலை 6 மணிக்கே போன் பண்ணியிருந்தீங்கதான்...நான்தான் 10 மணிக்கு உரியவங்ககிட்ட பேசி சரிபண்ண சொல்றேன்னு சொன்னேனேம்மா....ஆமாம் மணி இப்ப ஒன்பதேகால்தான்.........ஆமாம்மா, ஆபீஸ்ல ஆளுங்க இருப்பாங்கதான்......இதோ பாருங்க நான்தான் செஞ்சித்தரேன்னு சொன்னேனேமா.......அதுக்குள்ள திரும்ப போன் பண்ணினா என்னபண்றது........ இதோ பாருங்கம்மா... நீங்க நினைக்ற மாதிரி சுத்தம் பண்ற ஆளு யாரு.....அவர் நம்பர் என்னனென்னுல்லாம் கண்டுபிடுச்சு அவர்கிட்ட நான் பேச முடியாதும்மா.....அதிகாரிங்க காலை ஒன்பதரைக்குதான் வருவாங்க...... அவங்க கிட்ட பேசி உடனே சரி பண்ண சொல்றேன்.....ஆமாம்மா.... 3 வருஷத்துக்கு முன்னாடி உங்க வீட்டுக்கு நான்வந்து ஓட்டு கேட்டேன்தான்.....இல்லைன்னு சொல்லலையே.......என்னம்மா இப்படி பேசறீங்க......ஏம்மா இந்த மூணு வருஷத்தல உங்க வீட்டாருக்கோ உங்க தெருவுக்கோ நான் ஏதும் செய்யலைன்னு உங்களால சொல்ல முடியுமா ?....... ஏன்மா திரும்பத் திரும்ப நான்வந்து  ஓட்டு கேட்டதையே சொல்லிகிட்டு இருக்கீங்க.....உங்கவீட்டு சாக்கடைல நானாம்மா குப்பைய கொட்னேன்.....என்னாலயா சாக்கடை அடைச்சுகுச்சு......சொல்லுங்க .......நீங்களோ உங்க குடித்தனக்காரங்களோதான காரணம்.....பொறுமையா இருங்க மத்தியானத்துக்குள்ள சரி பண்ணிடுவாங்க......இனிமே இப்படி நடக்காம பார்த்துக்குங்க.....’’ என்றார்.

      பின்னர் அதிகாரியைத் தொடர்புகொண்டு அவர் பேசியபோது அப்பெண்மணி யாரென்று என்னால் கணிக்கமுடிந்தது.

     நண்பர் கண்ணியமானவர், சமுதாய அக்கறை கொண்டவர்.அவரை இப்படி போட்டு மிதிப்பது எனக்குள் உறுத்தியது.

     புதுவையில், அரசியல் வாதியென்றால் அந்நிய மாநிலத்திலிருந்து வந்து குடியேறியிருப்பவருக்குக்கூட இளக்காரமாகிவிட்ட நிலை வேதனையைத் தந்தது.

        குடியரசு நாட்டில் குடிமக்கள் எல்லோரும் தம்மை இந்நாட்டின் மன்னராக அனுமானித்துக்கொள்ள அனைத்து உரிமைகளும் உண்டு.

         சரிதான்.


   ஆனால், அதற்காக அவர்கள் ஒருசிலரை ‘அடிமை’ என்றெண்ணுவது எவ்விதத்திலும் சரியாகாது !

                      ~~~~~~~~~#####~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment