கோவையில் பள்ளிச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அவளையும் அவளது தம்பியையும் கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு.
– 25/3/2014,இன்றைய செய்தி!
இனிவரும் நாட்களில் இப்படியும் நடக்கலாம் -
தீர்ப்பை எதிர்த்து மாநிலம் முழுவதும் கடையடைப்பு ..
– எவரெவர்க்கு யார் யாரெல்லாம் பிடிக்கவில்லையோ அவரவரது உருவ பொம்மைகள் எரிப்பு – சாலை மறியல்- போராட்டம் .
ஆளும் கட்சி, எதிர்கட்சி, அவற்றைச் சுற்றியுள்ள கட்சிகளால் தூக்கு தண்டனை தீர்ப்பை எதிர்த்து சட்ட மன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் –
தூக்கு தண்டனை எதிர்ப்புக் கட்சிகள் அப்பீல் மனு தாக்கல்.
பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகு
- பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் - கால தாமதமான தீர்ப்பால் , கொலையாளி கடும் மன உளைச்சலுக்கு ஆளானதால் – தண்டனை ரத்து - உடனே மாநில அரசு விடுவிக்கலாம்- உச்ச நீதி மன்றம் தீர்ப்பு.
குற்றமைற்றவரை சிறையில் தள்ளி, வதைத்ததற்கு மத்திய மாநில அரசு அவருக்கு நட்டஈடு வழங்கவேண்டும்- மனித உரிமையாளர்கள் மறு சீராய்வு மனு-
அவருக்கு ஒரு ஏக்கர் நிலமும் ஒரு லட்சம் ரூபாயும் தர சம்மதித்து தானே முன் வந்து மாநில அரசு எழுத்துபூர்வ பதில் மனு.
-அரசின் பெருந்தன்மையை பல கட்சிகள் வரவேற்பதாய் பத்திரிக்கைகள் முதல் பக்க செய்தி.
- ஃபேஸ்புக்கில் புரோஃபைல் போட்டோக்களை மாற்றிப்போட்டு பலர் கொண்டாட்டம்.
No comments:
Post a Comment