காமன் வெல்த் மாநாட்டில் கனடாவின் பங்கேற்பு குறித்த செய்திகளை எந்த இந்திய ஊடகங்களும் வெளியிடாதது ஏன் ? எதற்காக??
~~~~~~~~~~~~~ புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் அதிகம் வசிக்கும் நாடு வட அமெரிக்க நாடான கனடா ஆகும். அதன் அடிப்படையில் இலங்கைத் தமிழரது இன்னல்கள் குறித்து அந்நாடு எடுக்கும் நிலைப்பாடு பெருமளவில் பிற நாடுகளில் பேசப்படும்.
கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்த்ரேலியாவில்
நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் 2013ல் இலங்கையில் மாநாடு நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, கனடா அதிபர் ஸ்டீபன் ஹார்பர் கடும்கண்டனத்தை பதிவு செய்தார் என்றும், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் என்றும் மேலும்,
இலங்கையில் மாநாடு நடைபெற்றால், அதில் கனடா பங்கேற்காது (கவனியுங்கள் கனடா)
எனவும் அறிவித்தார் என்றும் மிகப் பெருமையாக பலரால் பேசப்பட்டதும் யாவரும்
அறிந்ததே.
அதுபோலவே, அண்மையிலும் ‘ கொழும்பில் இடம் பெறும் காமன் வெல்த் மாநாட்டில் கனடா நாட்டின் குழுவும் அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹாபரும் பங்கேற்காது புறக்கனிக்கின்றனர் ’ என்றும் எல்லா ஊடகங்களாலும் முன்னிறுத்தப்பட்டது.
ஆனால், நவம்பர் 7ந்தேதியிலேயே இலங்கையின் ‘தி ஐலண்டு’ ஆங்கிலப் பத்திரிக்கை ‘‘கனடா பங்கேற்கின்றது’’ என்று செய்தி வெளியிட்டது.
அதுபோலவே, நவம்பர் 12ந் தேதியிலேயே, காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்க இந்திய வம்சாவழியினரும் டான்சானியாவில் பிறந்தவரும், தற்போது கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் பாராளுமன்ற செயலாளருமாக இருக்கும் திரு. தீபக் ஓபராய் தலைமையிலான கனடா நாட்டு குழு ஒன்று இலங்கை வந்து சேர்ந்துள்ளது.
நேற்று, ஆனையிரவுப் பகுதியில் போரில் உயிர் நீத்த
இலங்கைத் தமிழ் மக்களுக்கு திரு.தீபக் ஓபராய் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய
செய்தியைப் படத்துடன் அந்நாட்டு தமிழ் பத்திரிகை ‘உதயன்’ வெளியிட்டுள்ளது.
ஆயினும், ஆச்சர்யமாக, காமன் வெல்த் மாநாட்டில் கனடாவின் பங்கேற்பு குறித்த செய்திகளை எந்த இந்திய ஊடகங்களும் வெளியிடவில்லை.
வெளியிடாதது ஏன் ? எதற்காக??
‘ இந்தியாவை, இந்திய அரசை, அதன் பிரதமரை, ஆளுகின்ற கட்சியை ஏனையோருக்கு குறைத்துக் காட்டுவதற்காகவோ ’ எனும் ஐயம் எனக்கு எழுகின்றது.
இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டில் கனடாவின் பிரதமர் உட்பட உயர்மட்ட குழு தான் புறக்கணிப்புச் செய்துள்ளது. கனடாவின் விசனத்தை வெளிப்படுத்தும் விதமாக கீழ்மட்ட குழு மாநாட்டில் பங்கேற்பு. அத்தோடு தீபக் ஓபராய் ஆனை இறவில் உயிரிழந்த தமிழர்களுக்கு அஞ்சலியும் தெரிவித்துள்ளார். முற்றாக மாநாட்டை புறக்கணிப்பதை விட கீழ்மட்ட குழுவை அனுப்பி பேச வேண்டியதை அழுத்திப் பேச வைப்பதே புத்திசாலித்தனம். இந்திய ஊடகங்கள் காங்கிரசை தரம் குறைக்க காசுக்கு மாரடித்துக் கொண்டிருப்பதை நன்றாக பார்க்க முடிகின்றது. இந்திய சமூக ஊடகங்கள் வலிமை குன்றியவை பொது ஊடகங்களின் பிரதிபலிப்புகளே, ஒரு சிலரைத் தவிர, ஆக பொதுப் புத்திக்கு வெளியே சிந்திக்கும் நிலையில் இல்லை என்பதையே உணர முடிகின்றது.
ReplyDelete