Sunday, 24 November 2013

ஆச்சர்யமூட்டும் வழக்குகள்! ( பலகீனமான இதயமுள்ளவர்கள் படிக்கவேண்டாம் ) 1.வினோதமான ஆருஷி தல்வார் கொலை வழக்கு.

                                ஆச்சர்யமூட்டும் வழக்குகள்!
                                                                                   ~~~~~~~~~~~~~~~
               ( பலகீனமான இதயமுள்ளவர்கள் படிக்கவேண்டாம் )


1.வினோதமான ஆருஷி தல்வார் கொலை வழக்கு.

   
அந்த அறையின் கதவு சற்றே விசித்திரமானது. அதை வெளிப்புரத்திலிருந்து பூட்டிவிட்டால் உள்ளிருந்து வெளியே வர சாவி தேவையில்லை. வெளியிலிருந்து உள்ளே செல்ல மட்டுமே சாவி  தேவை. வசதிமிக்கவர்கள் வசிக்கும் அபார்ட்மென்ட் அது. காவல் துறையினர் அந்த அறைக்குள் நுழைந்தபோது கட்டிலில், சுருக்கங்களே இல்லாது விரிக்கப்பட்ட நிலையிலிருந்த படுக்கையில், இளம்பெண்ணின் உடல் இருந்தது. படுக்கையில், தலையணையில் இரத்தக் கரையோ, அதன் சுவடோ இல்லை.

   
காலையில் பார்த்தபோது, தன் மகள், அவளது அறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கின்றாள் எனத் தகவல் சொன்ன அவளின் தந்தையும் தாயும் காவல் துறை அதிகாரிகளுக்கு இன்னது இன்னதென சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    கடைசீயாய் முந்தைய இரவு சுமார் 11.30 மணிவரையில் தன் மகளை அவளது அறையில் பார்த்ததாயும் அதற்குப் பிறகு அவளது அறைக்கதவைப் பூட்டி சாவியை தன்னுடைய அறையில் படுக்கையின் தலைமாட்டில் வைத்தது ஞாபகமிருப்பதாய் அவளின் அப்பா சொல்லிக்கொண்டிருந்தார்.

    
அப்பெண்ணின் படுக்கைக்குப் பின்னால் (தலைமாட்டில் )இருந்த அவளது பொம்மைகள் சீராய் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ( கவனிக்க - கலையாமல்! )

 
வீட்டில் வேறு ஏதுவும் காணாமல் போயிருக்கவில்லை. ரொக்கமும் விலையுயர்ந்த ஆபரணங்களும் அப்படியே இருந்தன. அவ்வீட்டிற்குள் வரக்கூடிய வசல் கதவுகள் எதுவும் உடைக்கப்படவில்லை. அவ்வீட்டு வேலையாட்களில் ராஜ் என்ற ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.

  
அக்கம்பக்கம் இருந்தவர்களும் கூடிநிற்க, காவல் அதிகாரிகளின் புலன் விசாரணையும் நடந்துகொண்டிருக்க சிறிது சிறிதாயிருந்த அந்தக் கொலை பற்றிய முடிச்சுகள் பெரிதாகிக்கொண்டிருந்தது.

   
“அநியாயமாய் இப்படி தம் மகளை எந்தப் பாவியோ அக்கிரமமாய் செய்துள்ளதை” கூறிப் பெற்றோர் அரற்றிகொண்டிருந்தனர். நண்பர்களும் அண்டை அயல் வீட்டாரும் அவர்களை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தனர். இனம்புரியா அசாதாரணம் அங்கிருந்த காவலர் உள்ளிட்ட அனைவரையும் கவ்விக்கொண்டிருந்தது.

    
குறிப்பிட்ட அந்த இரவில், அந்த அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியில் போனவர் அல்லது வெளியிலிருந்து அந்த அபார்ட்மென்டுக்குள்ளே வந்தவர் எவரும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததது.

    
சம்பவம் நடந்த வீட்டில், கொலை நடந்த இரவில், அப்பெண்ணின் பெற்றோரும் அவளும் அவர்களது வேலைக்காரன் ராஜ் மட்டுமே இருந்ததை அருகில் வசிப்பவர்கள் பார்த்ததாய் உறுதிப்படுத்தினார்கள். அதுவே அவர்கள் அவளைக் கடைசியாய்
உயிரோடு பார்த்தது என்றும் கூறினார்கள்.

    
மொட்டைமாடிக்குச் செல்லும் படிக்கட்டின் மேல்படிகளில் ரத்தக்கரைகள் இருப்பதையும்    மொட்டைமாடி கதவிலும், கதவின் பூட்டிலும் ரத்தக்கரைகள் இருப்பதையும் தற்போது தான் பார்த்ததாய் பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் வந்து அப்பெண்ணின் அப்பாவிடம் சொல்ல அவர் அதைப்பார்க்க எத்தனித்து படிக்கட்டில் ஒரு சில படிகள் ஏறிவிட்டு, பிறகு, ஏதொ யோசனையாய் நின்று “சாவி வேலைக்காரன் ராஜ்கிட்ட  இருக்குது” என்று  முணுகிக்கொண்டே கீழே இறங்கி வந்து உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்துகொண்டார்.

  
காவல்துறை அதிகாரிகள் படிக்கட்டில் ஏறிப்போய்பார்த்து மொட்டை மாடிக்குச்செல்லும் வாசல்கதவு பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும் இறங்கி வந்து ‘ரத்தக்கரை’ செய்தி சொன்னவரை விசாரித்தனர்.

    
எப்போதும் பூட்டப்படாது திறந்தேகிடக்கும் அந்தக் கதவு அன்றைக்குதான் பூட்டுபோட்டுப் பூட்டியிருப்பதாய் அவர் சொன்னார், விசாரித்ததில் வேறு சிலரும் ‘ஆமாம் சதா அது திறந்தேதான் கிடக்கும்’ என்றார்கள். ‘இன்றைக்குதான் அதிசயமாய் பூட்டியிருக்கு’ என்றும் சொன்னார்கள்.

    
இறந்தபெண்ணின் உடலும் சிலபொருட்களும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. விசாரணைக்காக ஒரு சிலர் அழைத்துச் செல்லப்படனர்.

    
மறுநாள், காவல்துறையினர், மொட்டை மாடிக்கதவை உடைத்து சோதனை செய்தபோது  அங்கொரு ஆணின் உடல் மூடிமறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.

     கொலை செய்யப்பட்ட பெண்ணின் அப்பா இறந்து கிடந்த அந்நபர் யார் என அடையாளம் காட்டவில்லை.

    
அது, வேலையாள் ராஜின் உடல்தான் என்று அவனது உறவினர் ஒருவர் அடையாளம் காட்டினர்.

    
அப்பெண்ணின் அம்மாவும் அவ்வுடலில் உள்ள ஆடையை வைத்து அது வேலையாள் ராஜ்தான் என அடயாளம்  காட்டினார்.

   
கொலை வேறெங்கோ நடந்து உடல் இங்கு கொண்டுவரப்பட்டாதற்கான, உடலை இழுத்துவந்த, அடையாளம் தரையில் காணப்பட்டது. ரத்தக்கரை படிந்த போர்வை ஒன்று மடித்து க்ரில் மேல் வைக்கப்படிருந்தது.

  
இரண்டு கொலைகளையும் நேரடியாய் பார்த்த சாட்சிகள் ஏதுமில்லை. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஏதும் கிடைக்கவில்லை.

     
வழக்கின் புலன் விசாரணை உள்ளூர் காவல்துறையிடமிருந்து சிறப்பு பிரிவுக்கு மாறியது.

   
பிரேதப்பரிசோதனை அறிக்கை, கொலையான வேலையாள் மற்றும் அப்பெண் ஆகிய இருவரது  தலையிலும் வளுவான பொருளால் தாக்கப்பட்ட காயங்களும், இருவரது  கழுத்திலும் நீளவாட்டில் தொழில் சாதுர்யம் தெரிந்த ஒருவரால் (சர்ஜிக்கலி ட்ரெயின்டு பெர்சொனால்) ஏற்படுத்தப்பட்ட வெட்டுக்காயமும் இருந்ததையும் அக்காயங்களால் மரணம் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டிருந்தது.
 
    
சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர்கள் தங்கள் மகளின் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்கவேண்டுமென்று பலவககளில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

   
பிரேதப்பரிசோதனை செய்த டாக்டரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர், பிரேதத்தில், இறந்துபோன அப்பெண்ணின் பெண்ணுறுப்பு அவள் இறந்த பின்னர் சுத்தம் செய்யப்பட்டிருப்பற்கான அறிகுறிகளைச் சொன்னார்.

  
மேலும், “கற்பழிப்பு” என்று பிரேதப்பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடவேண்டாம் என அப்பெண்ணின் சித்தப்பாவின் தூண்டுதலின்பேரில் மற்றொரு மருத்துவர் தனக்கு சிபாரிசு செய்ததையும் குறிப்பிட்டார்.

 
  மேலும், கொலையான பெண்ணினது பெண்ணுறுப்பின் மெல்பகுதியில் மட்டும் white discharge காணப்பட்டதையும், உறுப்பு இயல்புக்கு மாறாக அகண்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

  
  சிறப்புப் பிரிவினர், தங்களின் முயற்சிகளுக்குப் பின்னரும்...

1.வேலையாளின் இரத்தம் அப்பெண்ணின் படுக்கை விரிப்பிலோ, தலையணையிலோ இல்லை.அவளின் அறையில் அவனது கொலை நடந்ததென நிருபிக்க ஆதாரம் ஏதும் இல்லை.

2.மாடிப்படிக்கடில் பிணத்தை இழுத்துச் சென்ற அடையாளங்கள் மொட்டைமாடி அல்லாமல் வேறு இடத்தில் அவனது கொலை நடந்ததைக் காட்டுகின்றது.

3.அப்பெண்ணின பெற்றோரது உடையில் அவளது ரத்தகரை மட்டுமே காணப்படுகிறது, தவிர, வேலையாளின் ரத்தம் ஏதும் இல்லை.

4. கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் ஏதும் குற்றம் நடந்தபின் உடனடியாய் கண்டுபிடிக்கப்படவில்லை. கொலைக்குப் (கழுத்தில்வெட்ட) பயன்படுத்தப்பட்ட கூர்மையான கண்டுபிடிக்கப்படவே இல்லை. கைப்பற்றப்பட்ட கால்ப் ஸ்டிக்கில் இறந்துபோனவர்களின் இரத்தம் அல்லது டி.என்.ஏ காணப்படவில்லை.

 
[ இந்த  கால்ப் ஸ்டிக் சம்பவம் நடந்து ஓராண்டு கழித்துக் கண்டெடுக்கப்பட்டது ]

5.கைப்பற்றப்பெற்ற, கொலைசெய்யப்பட்ட இருவரின் இரத்தக்கரைகள் தோய்ந்த ஸ்காட்ச் பாட்டிலில் காணப்பட்ட கைவிரல் ரேகைகளை விளக்கும் ஆதாரமில்லை, அவை யாருடையவை என்பதை அடையாளம் காணமுடியவில்லை.

6.சம்பவம் நடந்த அபார்ட்மென்ட் காவலாளிகள் வந்துபோனவர்கள் பற்றிய பதிவுகள் எதையும் செய்திருக்கவில்லை.

7. பெற்றோர்தான் குற்றதில் ஈடுபட்டவர்கள் என நிருபணம் செய்ய ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

8. கொலைக்குபின்னர் வேலையாளின் செல் போன் இன்னோரு மாநிலத்தில் இருந்ததன் காரணத்தை விளக்கும் சாட்சியம் கிடைக்கவில்லை.

9.  கொலையானது ஒரு அபார்ட்மென்டினுள் நடந்தது என்பதால் நேரில் பார்த்த சாட்கள் எவரும் இல்லை.

10. கொலைக்குப்பின் அந்த வீட்டடின் தரை, படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்த ரத்தகரைகளை சுத்தப்படுத்த உபயோகித்த ரத்தம் தோய்ந்த துணி கண்டுபிடிக்கப்பட்டவில்லை, வேலையாளின் பிணத்தை மாடிக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்திய படுக்கை விரிப்பு கண்டுபிடிக்கப்பட்டவில்லை.

   எனும் காரணங்களையும் வேறு சில காரணங்களையும் காட்டி வழக்கை முடித்துக்கொள்ள குற்றவியல் நீதிபதிக்கு (சிறப்பு பிரிவினர்) அறிக்கை அனுப்பினர்.

    இதன்பின்னர், சட்டத்தின்படியாக குற்றவியல் நீதிபதிகு இருந்த வாய்ப்புகள் மூன்று. அவை,
     1. இவ்வறிக்கையை ஏற்று குற்றவியல் நீதிபதி வழக்கை கைவிடலாம் ( ஆனால் அந்நீதிபதி அவ்வறிக்கையை ஏற்க மறுத்தார்)

  2. ஆயினும் போதுமான சாட்சியங்கள் இருப்பதாய் நீதிபதி கருதும்பட்சத்தில் அவ்வறிக்கையை ஏற்காது குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடலாம் (அந்நீதிபதி இதைத்தான் செய்தார்).

   3. காவல்துறையினருக்கு மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிடலாம்.

  (நீதிபதி இந்த மூன்றாவதான வகையைப் பயன்படுத்த) சிறப்புப் பிரிவின் அறிக்கையை ஏற்று வழக்கை முடிக்கக் கூடாது, தம் மகளைக் கொன்ற உண்மைக்குற்றவாளியைக் கண்டறிய மீண்டும் விசாரிக்க உத்தரவிடவேண்டும் என பெண்ணின் பெற்றோர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆட்சேபணை மனு தாக்கல் செய்தனர்.

   
சிறப்பு புலனாய்வாளரது அறிக்கையைப் பெற்ற குற்றவியல் நீதிபதி, அதனை ஏற்க மறுத்ததுடன் பெற்றோரின் மனுவையும் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டதோடில்லாமல் 13 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை/ செய்கைகளை/ ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி, கொலைசெய்யப்பட்ட அப்பெண்ணின் பெற்றோருக்கு குற்றவாளிகளுக்கான சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அவற்றுள் சில….

##…
விசாரணையில்   சொன்னபடி, சம்பவம் நடந்த இரவு அவ் வீட்டில் இறந்துபோன பெண், அவளது பெற்றோர், வேலைக்காரன் ராஜ் ஆகிய நால்வர் இருந்துள்ளதை அக்கம்பக்கத்து வீட்டார் பார்த்திருக்கின்றனர்.

 ##…அதில் இருவர் கொலையாகி இறந்தபின்புயார்  கொலைக்கு காரணமாய் இருப்பார்கள்’ என்ற கேள்விக்கு நால்வரில்  உயிரோடு இருக்கும் அவ்விருவரையும்தான் சந்தேகத்தின் கை சுட்டிக்காட்டுகின்றது.

##…..அவளுடைய அறைக்கோ வீட்டிற்கோ பலவந்தமாய் வெளியிலிருந்து அவ்வீட்டிற்குள் எவரும் சென்றதக தடயங்கள் ஏதும் இல்லாதபோது உள்ளே இருந்தவர்கள்தான் குற்றத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும்…  கதவுகள் உடைக்கப்படாதிருப்பதால்..

     தங்களுக்கு குற்றவாளிக்கான சம்மன் அனுப்பியதை எதிர்த்தும் அதை ரத்துசெய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறியீடு செய்தனர் பெற்றோர்.
   
    குற்றவியல் நீதிபதி அப்பெண்ணின் பெற்றோருக்கு குற்றவாளிகளுக்கான சம்மன் அனுப்ப உத்தரவிட்டது சரியே அதை ரத்துசெய்ய முடியாது என 7-6-2012 ஆம் தேதியில் மேல் முறையீட்டைத் தள்ளூபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

     
இறந்த பெண்ணின் பெயர் ஆருஷி தல்வார்.

    
அவளின் பெற்றோரும், சித்தப்பாவும் டாக்டர்கள்.

    
கொலை 2008 ஆம் ஆண்டு மே மாத 15 -16 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் உத்திரப்பிரதேச நொய்டாவில் நடந்தது.

    
சிறப்புப் புலனாய்வு பிரிவு – சி.பி.ஐ.

                                                                   **********

8 comments:

  1. வியப்பாகத்தான் உள்ளது...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கும், கருத்துக்கும் மிக்க நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன்.

      Delete
  2. இப்படியெல்லாம் கூடவா? ஆச்சரியம்! தொடர்வதற்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆம்,ஆச்சரியம்தான்.

      அதனால்தான் 'ஆச்சர்யமூட்டும் வழக்குகள்' தலைப்பில் இது இடம்பெறுகிறது.. :)

      அகில உலகப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பதற்கான நாளான (25/11)இன்று…

      ஆருஷி தல்வார் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்…

      பெண்ணின் பெற்றோர் ராஜேஷ்வர் தல்வார், நுபுர் தல்வார் கொலைக் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

      - தண்டனை விபரத்தை நீதிமன்றம் நாளை (26/11/13) அளிக்க உள்ளது திரு.Thulasidaran V Thillaiakathu.

      கருத்திட்டமைக்கும், வாழ்த்துக்களுக்கும் தங்களுக்கு எனது நன்றி!

      Delete
    2. இன்று (26/11/13) குற்றவாளிகளுக்குத் தண்டனையை வழங்கிய நீதிமன்றம், குற்றவாளிகளான ஆருஷியின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தவறான தகவல் தந்த குற்றத்திற்காக ஓர் ஆண்டு சிறை தண்டனையும், சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து.

      Delete
  3. நான் பலமுறை இவ்வழக்கு நாளிதழ்களில் அடிபடுவதை பார்த்துள்ளேன். அனால் இன்று தன முழுமையாக வழக்கை பற்றி அறிந்து கொண்டேன்.தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நாளிதழ்களில் முழு விபரங்கள் வருவதில்லை திரு.ராஜா. தங்களது பத்திரிக்கையின் விற்பனையை மனதில்கொண்டே பெரும்பாலான பத்திரிக்கைகள் செய்கின்றன.

      நான் இங்கு பதிந்தவை இந்திய உச்ச நீதி மன்ற தீர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டு மொழியாக்கம் செய்தவைதான் .

      அகில உலகப் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒழிப்பதற்கான நாளான (25/11)இன்று…

      ஆருஷி தல்வார் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்…

      பெண்ணின் பெற்றோர் ராஜேஷ்வர் தல்வார், நுபுர் தல்வார் கொலைக் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

      - தண்டனை விபரத்தை நீதிமன்றம் நாளை (26/11/13) அளிக்க உள்ளது திரு.ராஜா.

      கருத்திட்டமைக்கும், வாழ்த்துக்களுக்கும் தங்களுக்கு எனது நன்றி!

      Delete
  4. இன்று (26/11/13) குற்றவாளிகளுக்குத் தண்டனையை வழங்கிய நீதிமன்றம், குற்றவாளிகளான ஆருஷியின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் கொலைக் குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், தவறான தகவல் தந்த குற்றத்திற்காக ஓர் ஆண்டு சிறை தண்டனையும், சாட்சியங்களை மறைத்த குற்றத்திற்காக ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து.

    ReplyDelete