ஒருமுறை
திரும்பிப் பார்ப்போமா… ‘ஜாலியன்வாலா பாக் படுகொலை’
இன்று 2013 ஏப்ரல் 13ந் தேதி…. 94 ஆண்டுகளுக்கு
முன் இதே நாளில் பஞ்சாப் மாநிலம், ஜாலியன்வாலா பாக் எனும் இடத்தில் நடந்தததை ஒருமுறை
திரும்பிப் பார்ப்போமா…
மாலை வேளை.. துப்பாக்கி குண்டுகளின் சத்தம் ரத்ன தேவிக்கு குலை நடுங்க வைத்தது…..அதுவந்த திசையில்தானே கணவர் போனார்..வாரிச் சுருட்டிக்கொண்டு ஓடினாள்…
ஓடிப்போய்
பார்க்க..அந்த இடமே அல்லோலகல்லோலப்பட்டது. அவளுக்குமுன் ஓடிய இரு பெண்கள்…
நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு அழ…கண்முன் விரிந்தகாட்சி..ரத்தவெள்ளத்தில்
எங்கும் மனித உடல்கள்…
தன்னையறியாமல் உடல்களைத் தாண்டி தேடத் துவங்கியவளுக்கு கிடைத்தது கணவனின் உயிரற்ற உடல்...வாரியெடுத்து நெஞ்சோடு அணைத்து ஓவென்று குரலெடுத்துக் கண்கள் இருளக் கதறினாள்…..
தன்னையறியாமல் உடல்களைத் தாண்டி தேடத் துவங்கியவளுக்கு கிடைத்தது கணவனின் உயிரற்ற உடல்...வாரியெடுத்து நெஞ்சோடு அணைத்து ஓவென்று குரலெடுத்துக் கண்கள் இருளக் கதறினாள்…..
அவளின் நீர் நிரம்பிவழிந்த கண்களில் மீண்டும் காட்சியும் பிரக்ஞையும் வந்தபோது எங்கும் இரவின் இருட்டு..வரண்டுபோன தொண்டையோடே ‘இவரை தூக்கிட்டுபோக யாரவது ஒரு கயித்துகட்டில் கொண்டுவாங்களேன்’.... என ஓங்கி இரைஞ்சினாள்.
யாரோ போகும் சத்தம் கேட்டது… நடுநெசியாகியும் யாரும் வரவில்லை..அவ்வவ்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் உயிருக்கு போராடும் ஜீவ அவலக்குரல்கள்..இடைவிடாத நாய்களின் சத்தம்.. இரவின் நிசப்தத்தில்.. பயத்தில் தன் கையில் கிடைத்த எதையோ எடுத்து நாய்களை விரட்டினாள்..
ரண வேதனையில் யாரோவொரு சிறுவன் மிக அருகில் இருப்பதை பார்த்து ஆதரவாய் இவள் கொடுத்த குரல்கேட்டு “பயமாருக்கு என்ன தனியே விட்டுட்டு பொய்டாதீங்க” என்று மீண்டும் மீண்டும் வலியுடனே அவன் அரற்றியது இவளைப் பிழிந்தது.. ‘இல்ல போகமாட்டேன் என் கணவர் உடலை விட்டுட்டு போகமாட்டேன்’ என்று திரும்பத்திரும்ப சொன்னாள்…. ‘குளிருதா, வேணும்னா என் துப்பட்டவால் உன்னை போர்த்திவிடவா’ என்றாள்..
அவன் குடிக்க தண்ணீர்கேட்டான்..ஆனால் ரத்தம் தவிர வேரெதும் அங்கில்லை….ஒவ்வொரு மணிக்கும் தொலைவில் இருந்த மணிக்கூண்டின் இயந்திர ஒலி…
இரண்டு மணியளவில் யாரோ தன் கால்களை விடுவிக்கக் கெஞ்ச..தட்டுத்தடுமாறி குரல் வந்த திசையில் போய்.. ரத்தம் தோய்ந்த அந்த நபரின் ஆடையை பிடித்து இழுத்து விடுவித்தாள்..
அதிகாலை 6 மணிக்கு யாரோ அவளைத் தூக்கியபோது எங்கும் சொந்தங்களைத் தேடுவோரின் அழுகுரல்கள் ஒலித்துக்கொண்டேயிருந்தது…
இது
கதையல்ல அப்பெண் தன் அவல நிலையை நினைவுகூர்ந்து வெளிவந்த ஒரு நிகழ்வு. இந்த
நிகழ்வும் அதன் பின்புலமும் இன்று ஒரு சிலருக்கே தெரியலாம்…..அது ஜாலியன்வாலா
பாக் படுகொலை- ஏப்ரல் 13, 1919…..


