நம்பிக்கை
FAITH.
~~~~~~~~~~~~~~~~
இன்று 28-6-2014ல், சென்னையில் பெய்த திடீர் மழையில்,
போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுப்பட்டு வந்த 11 அடுக்கு மாடி கட்டிடம்
ஒன்று இடிந்து விழுந்து மூவர் பலியானதாக தகவல்.
இடிபாடுகளுக்கிடையே சுமார் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை, குறிப்பாக,ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அனைவரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என நம்புவோம்.
மேலோட்டமான இத் தகவலோடு கூடுதல் செய்தி-
‘Trust Heights’ என்ற நிறுவனம் சென்னை, போரூர், மவுலிவாக்கத்தில் பதினோரு அடிக்குமாடிகளைக் கொண்ட இரண்டு கட்டிடங்களைக் கட்டி வந்தது.
அதில் ஒன்றின் பெயர் ‘The Faith’.
மற்றொன்றின் பெயர் ‘The Belief’ .
அதில் உள்ள வீடுகள் கட்டி முடிந்தவுடன் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று விளம்பரப் படுத்தப்பட்ட கட்டிடம் இன்று கட்டிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இடிந்து வீழ்ந்தது.
தொகுப்பு வீடுகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு இந்த ஆண்டு கொடுக்கப்பட்டுவிடும் என்று உறுதி அளிக்கப்பட்டாதாய் தகவல்.
வாங்க விரும்பியவர்களுக்கு உறுதியளித்த நிறுவனம் கட்டிடத்தின் உறுதி பற்றி கவலைகொள்ளாதது கொடுமையிலும் கொடுமை!
இது குறித்து விளம்பரம் அளித்துவந்த நிறுவனம் ஒன்று விளம்பரம் விளக்கிக் கொள்ளப்பட்டதாய் அறிவித்துள்ளது.
இந்த சோக நிகழ்வில்
இன்னொரு சோகம் என்னவென்றால், இடிந்துவீழ்ந்த கட்டிடத்தின் பெயர் ‘The Faith’.
வீழ்ந்தது ‘The Faith’ என்கின்ற கட்டிடம் மட்டுமல்ல!
கட்டுமான நிறுவனங்களின் மீதிருந்த ‘ Faith’ம் -நம்பிக்கையும் தான்.
பணம் பண்ணும் வித்தையைக் மட்டுமே கருத்தில் கொள்ளும்
கட்டுமான நிறுவனங்கள் அதனைக் கைவிட்டு இனிவரும் காலங்களில்
குடியிருக்க வரும் மக்களின் உயிர்பாதுகாப்பு குறித்து அக்கறை
காட்டுவார்கள் என நம்புவோம்.