பிரதமர் ஆக ஆசையா...
~~~~~~~~~~~~
உங்களுக்கு பிரதமர் ஆக ஆசையா...
நினைத்த மாத்திரத்தில் ஆக முடியாது ..
ஆனால், அடுத்தமுறை ஆவதற்கு ஐடியா இருக்கு...
முக்கியமானதாலே கொஞ்சம் பொருமையா படிங்க...
பொது வாழ்க்கை... சேவை இதெல்லாம் மறந்திடுங்க..
.....எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்....
ஆனால், கருத்தாய் லட்சக்கணக்கான கோடி பணம் சம்பாதியுங்கள்....
இரண்டாண்டு+ தண்டணை பெற்றுவிடாமல் மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்.
தேர்தலில் 400
எம்பி வேட்பாளார்களை ... அந்த 2 + இல்லாத, யாரை வேண்டுமானாலும் தேர்தலில் நிறுத்துங்கள்...
தேர்தல்நாளுக்குக் கடைசீ 3 நாள்.... சேர்க்கவேண்டியவதை
சேர்த்துவிடுங்கள்...
99% வேலை முடிஞ்சுது..
முடிவுகள் அறிவிப்பிற்கு இடைப்பட்ட காலத்தில் சாவகாசமாக
உட்கார்ந்து யாருக்கு என்ன போர்ட்ஃபோலியோ ன்னு முடிவு பண்ணிகுங்க...
முடிவு அரிவித்த இரண்டு மூணு நாளில் குடியரசுத்
தலைவர் உங்களை அழைப்பார்...
DONE !
என்ன, எல்லாத்தையும் வாங்கிகிட்டு NOTA ன்னு போட்டு சிலர் எரிச்சல் படுத்துவாங்க...
அதனாலென்ன வேலை முடிஞ்சுதில்ல !
பொதுவாக இதைப் படிப்பவர்களுக்கு கோபம் வரும்,
திட்டத் தோணும்.
ஆனால்..
பொது
வாழ்வில் பங்கெடுப்போருக்கும், அரசியலில் இருப்பவர்களுக்கும், தேர்தல் வேலை செய்பவர்களுக்கும்
மேலேயுள்ள வரிகளின் வலி தெரியும் !
**********